ஜூலை 8, 2026: பெங்களூருவைச் சேர்ந்த புளூரோஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், குடும்ப மரபுகள், முன்னோர்களின் வரலாறு, பழைய புகைப்படங்கள் மற்றும் பாரம்பரிய நினைவுகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் வகையில் 'LifeTree' என்ற புதிய குடும்ப நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தங்களது குடும்ப மரத்தை (Family Tree) உருவாக்கி, பல தலைமுறைகளாக வந்த பாரம்பரிய தகவல்களை டிஜிட்டல் களஞ்சியமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்.
7 முதல் 8 தலைமுறைகள் வரை தகவல் சேமிக்கும் வாய்ப்பு:
குடும்ப மூத்தவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், பழைய புகைப்படங்கள், குடும்ப ஆல்பங்கள் மற்றும் ஆவணங்களின் உதவியுடன் குடும்ப மரத்தை உருவாக்கலாம். இந்த தளத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் 7 முதல் 8 தலைமுறைகள் வரையிலான குடும்ப வம்சாவளி தகவல்களை பதிவு செய்து பாதுகாக்கும் வசதி உள்ளது.
ரயிலை பாதி வழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்க சென்ற லோகோ பைலட்.. பேசுபொருளாக மாறிய வீடியோ!
குடும்ப பாரம்பரியம், கலாசாரம், திருவிழாக்கள், மதச் சடங்குகள், திருமணங்கள், பாட்டியின் சமையல் குறிப்புகள், தாத்தாவின் வாழ்க்கை அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் குறுந்தகவல் பரிமாற்றம், வீடியோ அழைப்பு, குழு உரையாடல் மற்றும் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துகளை பகிரும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
தகவல் பாதுகாப்பு உறுதி:
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு அதிகாரி துளசிதாசப்பா கூறுகையில், பொதுவான சமூக வலைதளங்களில் பகிரப்படும் குடும்பத் தகவல்கள் தனியுரிமை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் 'LifeTree' தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்களை அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், தகவல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சி:
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வின்னெட் ஜெயின் கூறுகையில், தொழில்நுட்பம் உலகத்தை நெருக்கமாக்கியிருந்தாலும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவில்லை என்றும், மறைந்து வரும் குடும்ப பாரம்பரியம், புகைப்படங்கள், கதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த தளம், குடும்ப உறவுகளை டிஜிட்டல் வழியில் பாதுகாக்கும் புதிய முயற்சியாக கருதப்படுகிறது.

