குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கக் கூடாத தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் பிரெட் போன்ற முக்கியமான ஏழு உணவுப் பொருட்களைத் தெரிந்து கொள்வோம்.
: ஃபிரிட்ஜில் தக்காளி வைக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள் இதை..தக்காளி தக்காளி போன்றவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் சுவை மற்றும் மணம் முற்றிலும் மாறுபட்டுவிடும். அதுமட்டுமின்றி, ஃபிரிட்ஜின் குளிரூட்டும் தன்மையானது தக்காளியின் உள் கட்டமைப்பைச் சிதைத்து, அதன் அமைப்பை மாவுப் போல அல்லது கொழகொழப்பானதாக மாற்றிவிடும் என்பதால் இதனைத் தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது அதன் தரத்திற்கு முற்றிலும் எதிரானது.
இதில் உள்ள ஸ்டார்ச் சத்து குளிரின் காரணமாக வேகமாகச் சர்க்கதையாக மாறத் தொடங்கும். இதனால் உருளைக்கிழங்கின் சுவை மாறுவதோடு, சமைக்கும் போது ஆரோக்கியத்திற்குத் தீங்கான வேதிப் பொருட்கள் உருவாகவும் இது வழிவகுத்துவிடும். வெங்காயம் வெங்காயத்தை ஈரப்பதமான மற்றும் குளிரான ஃபிரிட்ஜில் வைக்கும் போது, அது எளிதில் மென்மையடைந்து பூஞ்சைக் காளான் (Fungus) பிடிக்கத் தொடங்கிவிடும். மேலும், வெங்காயத்தில் இருந்து வெளிப்படும் ஒருவித நெடி, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவி அவற்றின் சுவையைக் கெடுத்துவிடும் ஆபத்து உள்ளது.
பூண்டு வெங்காயத்தைப் போலவே பூண்டையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிரான சூழல் பூண்டு முளை விடுவதை ஊக்குவிப்பதுடன், அதன் மேல் பகுதியில் எளிதில் பூஞ்சைத் தொற்றுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இதனால் பூண்டு தனது மருத்துவக் குணம் மற்றும் காரத் தன்மையை இழந்து வீணாகிவிடும். தேன் இயற்கையாகவே பல ஆண்டுகள் கெடாமல் இருக்கக்கூடிய அற்புதமான குணம் தேனுக்கு உண்டு.
இதனைத் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதிலுள்ள சர்க்கரை படிகமாகி இறுகிப்போய்விடும் (Crystalization). இதனால் தேன் தன் இயல்பான நிலையை இழந்து கெட்டியாகி, பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமமானதாக மாறிவிடும். ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெயைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, அது உறைந்து வெண்ணெய் போன்று கெட்டியான பதத்திற்கு மாறிவிடும். இதனால் எண்ணெயைப் பயன்படுத்துவதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுவதோடு, அதன் உண்மையான தரமும் நறுமணமும் வெகுவாகக் குறைந்துவிடும் என்பதால் அறறை வெப்பநிலையே இதற்குச் சிறந்தது.
: ஃபிரிட்ஜில் தக்காளி வைக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள் இதை..பிரெட் வெளியில் வாங்கிப் பயன்படுத்தும் பிரெட்டை ஃபிரிட்ஜில் வைப்பது அதை மிக விரைவாக உலர்வாகவும், கடினமானதாகவும் மாற்றிவிடும். குளிரூட்டும் முறை பிரெட்டில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், அது தனது மென்மையையும் சுவையையும் இழந்து சாப்பிடும் தகுதியை விரைவில் இழந்துவிடும்.

