Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குறுங்கோள் தாக்கியதால் நொடி பொழுதில் உருவான கோடிக்கணக்கான வைரங்கள்.. அதிசய சம்பவம்!

குறுங்கோள் தாக்கியதால் நொடி பொழுதில் உருவான கோடிக்கணக்கான வைரங்கள்.. அதிசய சம்பவம்!

TV9 Tamil 4 days ago
சைபீரியா, ஜுலை 20 : பூமியை தாக்கிய ஒரு குறுங்கோள் காரணமாக, பூமியில் ஒரு விநாடியில் சுமார் கோடிக்கணக்கான வைரங்கள் உருவான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய வைர சுரங்கமான சைபீரியாவில் (Siberia) தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், பூமியை தாக்கிய குறுங்கோள் மூலம் கோடிக்கணக்கான வைரங்கள் உருவான அதிசயம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அதிசயம்

உலகின் மிகப்பெரிய வைர சுரங்கம் ரஷ்யாவில் (Russia) உள்ள வடக்கு சைபீரியா என்ற பகுதியில் தான் அமைந்துள்ளது. பாபிகை பள்ளம் என அழைக்கப்படும் இந்த வைர சுரங்கம், சுமார் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, சூரியனை சுற்றி வரக்கூடிய குறுங்கோள்களில் ஒன்று பூமியை தாக்கியதன் விளைவாக இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எங்கள் கட்டுப்பாட்டில் ஹோர்முஸ் - ட்ரம்ப் சொன்ன முக்கிய விஷயம்.. மீண்டும் பதற்றம்!

100 கி.மீ பெரியா பள்ளத்தை உருவாக்கிய குறுங்கோள்

35.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 8 கிலோ மீட்டர் அகலம் கொண்ட குறுங்கோள் ஒன்று பூமியை நோக்கி வந்துள்ளது. அது பூமியை தாக்கியபோது சுமார் 100 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த குறுங்கோள் தாக்குதலின் போது அதிக அழுத்தம் ஏற்பட்டு, அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலையும் அதிகரிக்க செய்துள்ளது. திடீர் மாற்றம்.. உக்ரைன் பிரதமர் ராஜினாமா.. ஜெலென்ஸ்கி செய்த அரசாங்க அதிரடிகள் வெப்பம் அதிகரித்தபோது அது கிராபைட்டின் மூலக்கூறு வடிவமைப்பை அழுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வெறும் ஒருசில நொடிகளில் ட்ரில்லியன் கணக்கான வைரங்கள் உருவாகியுள்ளன. இவ்வாறாக தான் உலகின் மிகப்பெரிய வைர சுரங்கம் உருவாகியுள்ளது. பூமியை குறுங்கோள்கள் தாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், குறுங்கோள் தாக்கியதன் மூலம் வைர சுரங்கம் உருவாகிய இந்த அதிசயம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil