Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குஷ்புவின் மகளுக்கு திருமணம் - குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு - மாப்பிள்ளை இவரா?

குஷ்புவின் மகளுக்கு திருமணம் - குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு - மாப்பிள்ளை இவரா?

TV9 Tamil 0 months ago
டிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சியின் மகள் அனந்திதாவுக்கும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல் அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளனர். இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பு, அனந்திதா மற்றும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

குஷ்புவின் மகளுக்கு திருமணம்

பிரதமரை சந்தித்தது குறித்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மே 29, 2026 அன்று சந்தித்தோம். அப்போது நானும் எனது கணவர் சுந்தர்.சியும் இணைந்து எங்களது மகள் அனந்திதா மற்றும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசனின் திருமண அழைப்பிதழை வழங்கினோம்.

தம்பதியினரை பிரதமர் ஆசீர்வதித்தார். மேலும் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கியதற்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் பணிவுடனும் உணர்கிறோம். பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil