தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
படத்தோட டைட்டில் மட்டுதான் லவ் இருக்கு... படத்தில இல்ல:
லவ் ஓ லவ் படம் தொடங்கும் போதே மாதர் சங்க தலைவி வனிதா நாயகன் பவிஷ் மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். காதலித்த பெண்ணை பவிஷ் ஏமாற்றிவிட்டதாக. அந்த புகாரின் அடிப்படையில் பவிஷ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வர அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்வராகவன் உள்ளார். தனது காதலி துர்காவை விட்டு விலக வேண்டும் என பவிஷ் நினைக்க என்ன காரணம் என்று செல்வராகவனிடம் விளக்குறார். ஒரு துக்க வீட்டில் காதலியை பார்த்து காதலில் விழுந்த பவிஷ் அதற்கு முன்பு வரை குடும்பத்தில் மிகவும் பொருப்பான பையனாக இருக்கிறார். வாங்கும் 40 ஆயிரம் சம்பளத்தை தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் கொடுத்துவிட்டு எந்த கடனும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் காதலிக்க தொடங்கிய பிறகு முதலில் காதலின் ஆசையை நிறைவேற்ற ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குகிறார் இஎம்ஐயில்.காதலிக்காக கடனாளி ஆகும் நாயகன்:
அதனைத் தொடர்ந்து வரிசையாக காதலியின் ஆசை என்று ஒவ்வொரு கடனாக பெற்று சுமார் 15 லட்சம் வரை கடனாலி ஆகி குடும்பத்தை கடன்காரர்கள் தெருவில் அசிங்கப்படுத்துக் அளவிற்கு மாறுகிறது. இதனால் மனமுடைந்த கே.எஸ்.ரவிக்குமார் மனைவி மற்றும் மகளை கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கிறார். தனியாக வசிக்கும் பவிஷ் காதலே வேண்டாம் என்று இருக்கிறார். தொடர்ந்து அவரைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று துர்கா துறத்த அதனை ஏற்க மறுக்கும் பவிஷ் என்று படம் செல்கிறது. இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை. பவிஷின் நடிப்பில் பல இடங்களில் அவர் தனது மாமா தனுஷின் 2000-களில் வெளியான படங்களின் நடிப்பை பார்க்க முடிந்தது. ... லைகா புரடெக்ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்ஷன் உள்ளது - ஜேசன் சஞ்சய்ஆண்களுக்கு வந்தால் அது எப்போதுமே தக்காளி சட்ணிதான்:
லவ் ஓ லவ் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் காதல் என்பதே இல்லை. மாறாக எப்படி எல்லாம் காதல் இருக்க கூடாது என்பதற்கு பல விசங்கள் உள்ளது. இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக ஒரே ஒரு ஸ்டீரியோ டைப்பால் பாதிக்கப்படும் ஆண்களின் குடும்பத்தை போலவே இந்தப் படத்தில் பவிஷ் நாராயணின் குடும்பம் பாதிக்கப்படும். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது. உங்களுக்கு வேறு என்ன செய்வதென்ன்று தெரியவில்லை. என்ன படமாக இருந்தாலும் 2 மணி நேரம் பார்க்கலாம் என்ற மனநிலையில் இருந்தால் இந்த லவ் ஓ லவ் படத்தை பாருங்கள். ... ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? இணையத்தில் வைரலாகும் தகவல்
