தென்னிந்திய மொழி சினிமாவில் நாயகனாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan).
மாவீரன் 2 திரைப்படம் உருவாகுவது உறுதியானது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
மாவீரன் 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்:
இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்திருந்த திரைப்படம்தான் மாவீரன். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. கார்த்தியின் 30வது படத்தில் இசையமைப்பாளராக இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத் - வெளியான அறிவிப்பு! இதற்கு பின் மாவீரன் 2 திரைப்படமானது எப்போது உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவீரன் 2 படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் (2027) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாவீரன் 2 திரைப்படம் உருவாகுவது குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
மாவீரன் 2 திரைப்படமானது மாவீரன் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். ஏற்கனவே இயக்குநர் மடோன் அஷ்வின் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டாராம். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் சேயோன் பட ஷூட்டிங்கில் இணைந்த நிலையில், இதை முடித்த பிறகு மாவீரன் 2 படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
