காந்தி நகர், நவம்பர் 15 : குஜராத்தில் (Gujarat) இளம் பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த நிலையில், தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட பெண்
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்ட, நவ்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஷ். இவருக்கு திருமணமாகி அஸ்மிதா சோலங்கி என்ற 32 வயது மனைவியும், இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 14, 2025) வீட்டில் தனது கணவன் இல்லாத போது சோலங்கி தனது இரண்டு மகள்களின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மருத்துவமனை வாசலில் நர்ஸ் படுகொலை.. கணவன் வெறிச்செயல்!தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சோலங்கி
தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்த சோலங்கி அதனை தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக மூவரும் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிர் இல்லாமல் கிடந்த சோலங்கி மற்றும் அவரது இரண்டு மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஸ்கூட்டரில் சென்ற குடும்பத்தை கார் மோதி கொலை செய்ய முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் தனது பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
