சென்னை மாவட்டம், வியாசர்பாடியை சேர்ந்தவர் வீர செல்வம். இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு கிருஷ்ணன் ( 6 வயது), மித்ரன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.
கிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே 3- ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணன் தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை என்று கூறப்படுகிறது. உடனே, சிறுவனின் தந்தை வீர செல்வம் தனது மகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு, வீரசெல்வம் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் வீர செல்வம் புகார் அளித்தார். அதில், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்ததாக தெரிகிறது. அதன்படி, போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி
இந்த நிலையில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுவன் கிருஷ்ணன் கழுத்து நெறிக்கப்பட காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கை வியாசர்பாடி போலீசார் கொலை வழக்காக மாற்றி கிடுக்கி பிடி விசாரணையே மேற்கொண்டனர். இதில், சிறுவனின் தாய் சிவரஞ்சனி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்.. ஓமன் டூ திருப்பத்தூர் வந்த நபரின் பதிவு வைரல்!
தாய் சிவரஞ்சனி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
அதன் பேரில், சிவரஞ்சினியே போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், சிவரஞ்சனி போலீசாரிடம் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தை அளித்தார். அதில், கடந்த மே 2- ஆம் தேதி இரவு சிறுவன் கிருஷ்ணன், தனது தம்பி மித்திரனின் கழுத்தில் அணிந்திருந்த சாமி கயிற்றை பிடித்து இறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். இதை பார்த்த, சிவரஞ்சனி கண்டித்துடன், மித்திரனுக்கு கழுத்து எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்த்துவதற்காக, மூத்த மகன் கிருஷ்ணனின் களத்தில் துப்பட்டாவை போட்டு விளையாட்டுத்தனமாக இறுக்கி உள்ளார்.பெற்ற மகனை தாய் கொலை செய்த சம்பவம்

