Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களே நோட் பண்ணுங்க.. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் நிறுத்தம்.. எப்போது தெரியுமா?

மக்களே நோட் பண்ணுங்க.. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் நிறுத்தம்.. எப்போது தெரியுமா?

TV9 Tamil 3 weeks ago
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
அந்த வகையில், வருகிற ஜூலை 4- ஆம் தேதி ( சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்லிடைக்குறிச்சி துணை மின் நிலையம்

ஓ. துலுக்கப்பட்டி:- ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ. துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாக்குடி, கபாலி பாறை, இடைகால், அனந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ்குத்தப்பாஞ்சான், காசி தர்மம், முக்கூடல், சிங்கம் பாறை ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 4- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னிருத்தம் செய்யப்பட உள்ளது. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்வீரவநல்லூர்:- கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், அத்தால நல்லூர், திருப்புடைமருதூர், வெள்ளங்குளி, ரங்கசமுத்திரம், புதுக்குடி, கூனியூர், காருக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அம்பாசமுத்திரம் பகுதியில் மின் தடை

அம்பாசமுத்திரம்:- அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர் பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளது. மணிமுத்தாறு:- மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன்மா நகர், தெற்கு பாப்பாங்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடையம் பகுதியில் மின் நிறுத்தம்

கடையம்:- கடையம், கட்டேரிபட்டி, முதலியார் பட்டி, பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், ரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவ நாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெய்காலிப்பட்டி மேட்டூர், கோவிந்த பேரி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

இதனால், மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தில் பொதுமக்கள் தங்களது மின்விநியோக பயன்பாட்டை முன்னதாகவே திட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு மின்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கல்லிடைக்குறிச்சி மின் துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.  தலைமையின் தவறான முடிவால் தள்ளாடும் அதிமுக.. தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள் பேச்சு!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil