பிரபல தயாரிப்பாளரின் மகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆன நடிகர் விஷால் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகவே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
காக்கிநாடாவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பியது மகுடம் படக்குழு:
அதன்படி விஷால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, காக்கிநாடாவில் இரண்டு வாரக் கடுமையான படப்பிடிப்புக்குப் பிறகு, 'மகுடம்' படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது. எனது அன்பான படக்குழுவினருக்கு, குறிப்பாக ஒளிப்பதிவாளர் அபிநந்தன், பிருந்தா மாஸ்டர் மற்றும் எனது இயக்கக் குழுவினருக்கு நன்றி. படம் முழுவதும் எனக்காக உறுதுணையாக இருந்த பிரபாவுக்கும், எனது முழு படக்குழுவினருக்கும், குறிப்பாக அகந்தையோ பகட்டோ இல்லாத தொழில்முறை அணுகுமுறை கொண்ட என் அன்பு அஞ்சலிக்கும், என் சிறந்த நண்பன் ஜான் விஜய், ஜேபி சார் மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்த அனைத்துப் பெண்களுக்கும், நான் உடல் முழுவதும் நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் மனம் தளராமல் இந்தப் பயணத்தைக் கடந்து செல்ல எனக்கு உறுதுணையாக இருந்த என் அன்புத் துணை சாய் தன்சிகாவுக்கும் என் பாராட்டுகள். சுப்பிரமணியம் அண்ணே. நன்றி. படத்தில் மிகவும் கடினமான 90-களின் பகுதியை நாங்கள் முடித்துவிட்டோம். நாளை முதல் சென்னையில் எங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். எங்களின் முதல் சிங்கிளுடன் ஜி.வி-யின் மேஜிக் விரைவில் அரங்கேறும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். ... Rathna Kumar: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் - இயக்குநர் ரத்னகுமார்!இணையத்தில் வைரலாகும் விஷாலின் எக்ஸ் தள பதிவு:

