Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மன அழுத்தத்துடன் லேட் நைட் உணவா? குடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து!

மன அழுத்தத்துடன் லேட் நைட் உணவா? குடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து!

TV9 Tamil 2 weeks ago
ன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. வேலைப்பளு, தூக்கமின்மை, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணிகள் உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதனுடன் சேர்ந்து இரவு நேரங்களில் தாமதமாக அதிகளவு உணவை உட்கொள்வதும் உடலுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள புதிய மருத்துவ ஆய்வு ஒன்று, மன அழுத்தத்துடன் கூடிய தாமதமான உணவுப் பழக்கம் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என்ற முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

இரவு 9 மணிக்குப் பிறகு அதிக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

இந்த ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வின் படி, இரவு 9 மணிக்குப் பிறகு தங்களின் அன்றாட கலோரி அளவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான உணவை உட்கொள்ளும் நபர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழ்பவர்களிடம் இந்த தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புணர்ச்சி, அசௌகரியம் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு பல மடங்கு உயர்வதாக மருத்துவ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மன அழுத்தமும் நள்ளிரவு உணவும் சேரும் போது என்ன நடக்கிறது?

மருத்துவ நிபுணர்களின் விளக்கப்படி, மனித உடலின் செரிமான மண்டலம் குறிப்பிட்ட நேர அட்டவணையைப் பின்பற்றுகிறது. இரவு நேரங்களில் உடல் ஓய்வுக்குத் தயாராகும் நிலையில் இருக்கும் போது, அதிகளவு உணவு உட்கொள்வது செரிமான அமைப்புக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மன அழுத்தம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை உருவாக்குவதால், செரிமான செயல்பாடு சீர்குலையும் அபாயமும் அதிகரிக்கிறது. இந்த இரு காரணிகளும் ஒன்றாக இணையும் போது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நீண்டகால பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணவுப் பழக்கத்தில் மாற்றம் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்

உடல்நலத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் இரவு நேரங்களில் அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுதல், எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்வு செய்தல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் போன்ற பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், நீடித்த செரிமான பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil