Dailyhunt
மனைவியுடன் சண்டை.. மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்!

மனைவியுடன் சண்டை.. மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்!

TV9 Tamil 1 month ago
ஜெய்ப்பூர், மார்ச் 08 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் உள்ள துங்காரி கே பந்தா கிராமத்தில் வசித்து வருபவர் சோஹன்லால்.
இவருக்கு திருமணம் நடைபெற்று மொத்த ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், அவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மாமியாரின் மூக்கை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்

சோஹன்லால் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக கணவன் - மனைவி கடந்த ஒரு ஆண்டு காலமாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே மனைவியின் குடும்பத்தாருடன்  சோஹன்லாலுக்கு நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களது உறவினர்கள் தம்பதியை சேர்த்து வைப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

புகார் அளிக்க சென்ற மாமியாருக்கு மருகமன் செய்த கொடூரம்

இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது, இரு குடும்பத்தினரும் கடந்த பல நாட்களாக கடுமையான சண்டையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மார்ச் 06, 2026 அன்று மாலை சோஹன்லாலின் மாமியார் கெலி தேவி, மருமகன் மீது புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுக்கொண்டு இருந்துள்ளார். இதனை எப்படியே அறிந்துக்கொண்ட  சோஹன்லால் தனது மாமியார் காவல் நிலையத்திற்கு செல்லாதபடி தடுத்துள்ளார். பெயிண்ட் தெளித்ததால் பேரனுக்கு கொதிநீர் ஊற்றிய பாட்டி - நாக்பூரில் அதிர்ச்சி இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சோஹன்லால் தனது மாமியாரின் மூக்கை வெட்டி ஒரு பகுதியை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் வலியால் அலறி துடித்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் மருமகன் மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil