Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு - பிரதமர் மோடி முதலிடம்

மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு - பிரதமர் மோடி முதலிடம்

TV9 Tamil 2 days ago
கஸ்ட் 21, 2026: மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக 'தகவல் வெளியாகியுள்ளது இதில், அமைச்சர்களின் டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையும் பகிரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2026ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அமைச்சர்களின் இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள்:

அமைச்சர்களின் சமூக வலைதளங்களில் உள்ள பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை மட்டும் ஒப்பிடாமல், அவர்களின் டிஜிட்டல் தகவல் தொடர்பின் தரம், சென்றடைவு மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட ஈடுபாடு ஆகியவற்றை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு முதலிடம்:

இந்த ஒட்டுமொத்த மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கு இடையிலான ஒப்பீட்டுடன் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  மாணவர்களை கண்டித்த பள்ளி முதல்வர்.. 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி.. சமூக வலைதள செயல்பாடுகளை மதிப்பிடும்போது, ஒவ்வொரு நாளும் சராசரியாக வெளியிடப்படும் பதிவுகளின் எண்ணிக்கை, மொத்த ஈடுபாடு, ஒவ்வொரு பதிவுக்கும் கிடைக்கும் சராசரி ஈடுபாடு, மொத்த மற்றும் சராசரி லைக்குகள், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அமைச்சரின் பதிவுகள் மூலம் உருவாகும் ஒட்டுமொத்த தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்:

இதற்கு முன்னதாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் தங்களது செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் தளத்தில் அமைச்சர்கள் செயல்படுகிறார்களா என்றும், அந்த தளத்தில் எத்தனை இளைஞர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், அமைச்சர்களின் பதிவுகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்றும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காட்டுக்குள் போகாமலே சஃபாரி! இந்தூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் விர்ச்சுவல் உயிரியல் பூங்கா இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சமீபத்திய மதிப்பீடு, அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் இடையிலான நேரடி தகவல் தொடர்புக்கான முக்கிய தளமாக சமூக வலைதளங்களை மாற்றுவதற்கான மத்திய அரசின் முயற்சியை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் கிடைக்கும் ஈடுபாடு மற்றும் பொதுமக்களின் தொடர்பு ஆகியவை டிஜிட்டல் தகவல் தொடர்பின் முக்கிய அளவுகோல்களாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil