திருவள்ளூர், மே 30 : மது போதையில் பெண்களிடம் தகராறு செய்த அசாம் மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இளைஞர் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியிருக்கிறது.
வட மாநில இளைஞரை அடித்தே கொன்ற கிராம மக்கள்
இதனையடுத்து அந்த பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த உறவினர்களும் அந்த ஊர் மக்களும் இளைஞனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அ்த இளைஞரின் பெயர் பிரசென்ஜித் தாஸ் என்பதும் அவருடன் 5 இளைஞர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி திருவள்ளூர் வந்துள்ளனர். திருவள்ளூரில் அறை ஒன்றை வாடக்கைகக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் பிரசென்ஜித் தாஸ் என்பதும் தனியாக இருந்த பெண்களிடம் தண்ணீர் கேட்பது போல தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்கள் வீட்டின் கதவை மூடியிருக்கின்றனர்.
அப்போது பிரசென்ஜித் தாஸ் கத்திால் ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் ஊர் மக்களுடன் வந்து பிரசென்ஜித் தாஸை தாக்கியுள்ளனர். இதில் பிரசென்ஜித் தாஸ் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நட்தித வருவதாக கூறப்படுகிறது.

