தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களும் இந்த 2026-ம் ஆண்டு எதிரபார்த்து காத்து இருந்த படம் ஜன நாயகன். தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இது என்று தெரிவித்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
ஒரு பக்கம் தளபதி விஜயின் ரசிகர்களுக்கு சோகம் இருந்தாலும் ஜன நாயகன் படத்தை அவர்கள் அனைவரும் கொண்டாட காத்து இருந்தனர். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, சுனில், மோனிஷா ப்ளசி, ரெபே மோனிகா ஜான் மற்றும் பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மேலும் இது இசை வெளியீட்டு விழாவாக மட்டும் இன்றி தளபதி விஜய்க்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் கடந்த ஜனவரி மாதமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மே மாதத்தில் வெளியீட்டை திட்டமிடும் ஜன நாயகன் படக்குழு:
இதனைத் தொடர்ந்து இந்த சென்சார் பிரச்சனை நீண்டுகொண்டே இருந்த நிலையில் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் கசிந்தது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டின் தயாரான இந்த ஜன நாயகன் படம் இணையத்தில் முழுவதுமாக கசிந்தது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து படத்தை யார் இணையத்தில் வெளியிட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்து உள்ளதாகவும் அந்த படத்தின் வெர்ஷன் வருகின்ற மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

