பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தொடர்ந்து இந்தி சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு என்ற் ரசிகர்கள் பட்டாளம் பான் இந்திய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயணா படத்தின் டீசர் வெளியானது:
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கி உள்ள இந்த ராமாயணா படத்திற்கு நமித் மல்கோத்ரா திரைக்கதை எழுதி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் யாஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இரண்டாம் பாடம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராமாயணா படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பாசிட்டிவான விமர்சனங்களும் இந்த டீசருக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ... தியேட்டர்ல பாக்கலையா டோண்ட் ஒரி… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது தாய் கிழவி படக்குழுராமாயணா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

