மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பேசில் ஜோசஃப். மலையாள சினிமாவில் மல்டி டேலண்டராக வலம் வரும் வினீத் ஸ்ரீநிவாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் போதே பேசில் ஜோசஃப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு குஞ்சிராமாயணம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பேசில் ஜோசஃப் இயக்கத்தில் அடுத்தடுத்து கோதா மற்றும் மின்னள் முரளி ஆகியப் படங்கள் வெளியானது. இதில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான மின்னல் முரளி படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தாவிற்குமே சூப்பர் ஹீரோ படமாக இந்த மின்னள் முரளி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக உலக அளவில் ரசிகர்களிடையே பாராட்டை மட்டும் இன்றி பல விருதுகளையும் வென்றார் இயக்குநர் பேசில் ஜோசஃப்.
மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை:
மின்னல் முரளி படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பேசில் ஜோசஃப் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு தற்போது எந்த எண்ணமும் இல்லை என்றும் நான் வேறொரு பணியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் அதற்குச் சற்று அதிக நேரம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.இணையத்தில் வைரலாகும் பேசில் ஜோசஃப் பேச்சு:

