பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். பல நூறு படங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட் கொடுத்த இவரது வாரிசாக பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார் அவரது மகன் அபிஷேக் பச்சன்.
இந்த நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தஸ்வி. சோசியல் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் துஷார் ஜலோட்டா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் உடன் இணைந்து நடிகர்கள் யாமி கௌதம், நிம்ரத் கவுர், மனு ரிஷி சத்தா, அபிமன்யு யாதவ், அருண் குஷ்வா, சித்தரஞ்சன் திரிபாதி, டேனிஷ் உசேன், சுமித் சேகர் ராய், ரோஹித் திவாரி, லோகேஷ் மிட்டல், முபாஷிர் பஷீர் பேய், தன்வீர் சிங், சச்சின் ஷெராஃப், அதிதி வட்ஸ், சிவன்கித் சிங் பரிஹார், சக்தி சிங்,ஷோப்னா யாதவ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
தஸ்வி படத்தின் கதை என்ன?
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
... நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் காயமடைந்தால் அது அவர்களுக்குதான் ஆபத்து - நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் கணவர் சொல்வதை கேட்டு வந்த நிம்ரத் கவுர் பின்பு முதலமைச்சர் என்ற பதவி போதையில் தனது கணவரை ஜெயிலிலேயெ வைத்துவிட்டு தானே ஆட்சியை நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இது ஒரு கட்டத்தில் அபிசேக் பச்சனுக்கு தெரிந்துவிட அவர் அதனை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் என இரண்டு ஓடிடி தளங்களிலும் காணக் கிடைக்கின்றது. ... கர படத்திலிருந்து வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ

