Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதியவரை கொன்ற புலி.  டிரோன் உதவியுடன் தீவிரமாக தேடும் வனத்துறை

முதியவரை கொன்ற புலி. டிரோன் உதவியுடன் தீவிரமாக தேடும் வனத்துறை

TV9 Tamil 2 weeks ago
நீலகிரி, ஆகஸ்ட் 9 : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி முதியவர் இறந்த நிலையில் ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்ட் என்ற பகுதியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது வீட்டில் குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அதனை சரி செய்ய பாலகிருஷ்ணன் தனியார் தேயிலைத் தோட்டப்பகுதி அருகே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிராம மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதியவரை கொன்ற புலியை டிரோன் உதவியுடன் தேடும் வனத்துறை

இந்த நிலையில் ஆகஸ்ட் 9, 2026 இன்று காலை, பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு அருகே தேயிலை தோட்டப்பகுதியில் அவரது கால், கை என உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்படடுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் புலிகள் தாக்கியதில் அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் முதியவர் பாலகிருஷ்ணனின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு காட்டாமல் எடுத்து சென்றதாக வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். இதனையடுத்து வனத்துறையினரின் அலட்சியமே முதியவர் பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு காரணம் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக புலியைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் இறந்தவரின் கடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் முதியவரை தாக்கிய புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை புலி கிடைக்காத நிலையில் டிரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த புலி மேலும் பலரையும் தாக்கக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை பிடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு- 2026 3 ஆம் கட்டத்துக்கான பணிகளுக்காக 194 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil