தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஜூலை 8, 2026 இன்று சற்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,542 ஆக உள்ளது. அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.11,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வகை நாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடைகளில் செய்கூலி, ஜிஎஸ்டி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு திட்டமிடுவது சிறந்தது.
வெள்ளி விலையும் சரிவு
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் ஜூலை 8, 2026 சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஜூலை 7, 2026 நேற்று ஒரு கிராம் ரூ.250 மற்றும் ஒரு கிலோ ரூ.2,50,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று விலை குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2025 ஜூலை 8 ஆம் தேதி ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.72,480க்கும், ஒரு கிராம் ரூ.9,060க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது, ஒரு சவரன் ரூ.1,06,640க்கும், ஒரு கிராம் ரூ.13,330க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் சவரனுக்கு ரூ.34,160 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது இப்போது சரியான நேரமா என மக்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் தினசரி விலையைக் கவனித்து, கடைகளில் செய்கூலி, ஜிஎஸ்டி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களையும் கணக்கில் கொண்டு திட்டமிடுவது சிறந்தது என கூறப்படுகிறது.

