Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

TV9 Tamil 6 days ago
சென்னை, ஜூலை 8 : தமிழ்நாட்டில் தனியார் பால் விலை ஜூலை 9, 2026 நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 ஆக உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளாக இந்தியாவில் பால் உற்பத்தி கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அது பால் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பால் உற்பத்தி சரிவை சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில் அதனால் ஏற்படும் இழப்பை சரி செய்ய கடந்த பிப்ரவரி மாதம் தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின. சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் அதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு வாகன எரிபொருள் விலையில் நேரடி தாக்த்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றன. இதனையடுத்து இந்த 2026 ஆம் ஆண்டு 2வது முறையாக பால் விலையை உயர்த்த தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் ஒன்றான ஆரோக்யா ஜூலை 9, 2026 நாளை பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 ஆக உயர்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் 500 மி.லி சம்ன்படுத்தப்பட்ட பால் ரூ.29ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35ல் இருந்து ரூ.37 ஆகவும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39ல் இருந்து ரூ.41 ஆக விலை உயர்கிறது. அதே போல 1 லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.57 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், 1000மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும், 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுவதால் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil