Dailyhunt
நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய தீர்ப்பு - குற்றவாளி அறிவிப்பு

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய தீர்ப்பு - குற்றவாளி அறிவிப்பு

TV9 Tamil 1 week ago
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் குற்றவாளி எனவும் அவருக்கான மே 5, 2026 அன்று அறிவிக்கப்படும்  புதுச்சேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.  சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் சிறையில் ஏற்கெனவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
காணாமல்போன சிறுமி இரு நாட்கள் கழித்து வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil