Dailyhunt
நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது!

நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது!

TV9 Tamil 5 months ago
மிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக என்ட்ரி கொடுத்துள்ளவர் நடிகர் பவிஷ் (Actor Pavish). நடிகர் தனுஷின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் பவிஷ்.
இவர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவர் தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் உடன் இணைந்து மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ஆர்.சரத்குமார், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன், ஆடுகளம் நரேன், சித்தார்த்த சங்கர், சரண்யா பொன்வண்ணன், டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன், ஸ்ரீதேவி, உதய் மகேஷ், அக்ஷய் கிருஷ்ணா, பிரியங்கா மோகன், ஜி.வி.பிரகாஷ் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் தனுஷ், கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது:

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பவிஷ் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் பவிஷ் நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாக துர்கா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் - கே.எஸ்.ரவிக்குமார்!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil