Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நீலகிரியில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தை நாசம் செய்த யானை!

நீலகிரியில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தை நாசம் செய்த யானை!

TV9 Tamil 2 weeks ago
நீலகிரி, ஜூலை 09 : நீலகிரி (Nilgiris) மாவட்டம், கூடலூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் வழக்கமான ஒன்றாக உள்ள நிலையில், அவை அவ்வப்போது இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபடுவது பொதுமக்களை கடும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. இந்த யானை அட்டகாச சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை

கூடலூர் தாலுகா, தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை பகுதியில் காட்டு யானை ஒன்று தினமும் ஒவ்வொரு கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த யானை காலை நேரத்தில் சாலைகளில் நடந்துச் செல்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையும் படிங்க : இஸ்லாமாக மாறிய ஒருவருக்கு முஸ்லிம் லெப்பாய்' சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது.. அரசாணை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் கிளை

விவசாயின் தோட்டத்தை சேதப்படுத்திய யானை

அந்த வகையில் ஜூலை 07, 2026 அன்று ஊருக்குள் புகுந்த அந்த காட்டு யானை, செளுக்காடி பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது யானை அவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை முழுவதுமாக சேதப்படுத்தியது. இவ்வாறு யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதன் காரணமாக தொடர் நஷ்டங்களை சந்தித்து வருவதாக அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் இருக்கின்றனர். ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது ஈசி.. ஜூலை 11- இல் நடக்கும் பிரம்மாண்ட முகாம்.. முழு விவரம் உள்ளே!

யானையை ஊருக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிலையில்  அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அந்த காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil