மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார்.
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழ் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழ் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தில் , இவர்கள் இருவருக்கும் 10 வயசு வித்தியாசம் காண்பிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை போலவே இந்த படமும் வயது வித்தியாச காதல் குறித்த கதையில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நிவின் பாலி இசையை விரும்பும் ஜஸ்டின் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை மமிதா பைஜூவும் இசை மற்றும் நிவினை விரும்பும் பெண் அஸ்லே என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது பீல் குட் காதல் கதையில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. BKU மற்றும் இருமுடி பட வெற்றி.. PR01 படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா!பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் ரிலீஸ் எப்போது:
இந்த படமானது மலையாளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூலை குவிந்திருந்தது. இப்படம் தற்போது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் தமிழில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நிச்சயம் தமிழிலும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
