சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் ரசிகர்கள் எதிர்பார்த்தப் படம் கூலி.
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான கூலி - ரசிகர்களின் விமர்சனம்:
படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததால் திரையரங்கிற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை இல்லை. 18 வயதிற்கு மேலே உள்ளவர்கள் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்பதால் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் தொடர்ந்து திரையரங்குகள் நிறைந்துவழிய அங்கு பார்வையாளர்கள் இல்லை. இதன் காரணமாகவே படத்தை மிக விரைவாக படக்குழு ஓடிடியில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஓடிடியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதன்படி கூலியாக இருக்கும் ரஜினிகாந்த் தங்களை ஏமாற்றியா முதலாளி நாகர்ஜுனாவின் தந்தையை கொலை செய்கிறார். அப்படி ரஜினி நாகர்ஜுனாவின் தந்தையை கொலை செய்யும் போது நாகர்ஜுனா டீன் ஏஜ் பையனாக இருக்கிறார். இந்த நிலையில் படத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் ரஜினிகாந்தின் மகள் மற்றும் நாகர்ஜுனாவின் மகன் இருவரும் ஒத்த வயது உடையவர்களாக இருப்பது பெரிய லாஜிக் மிஸ்டேக்காக உள்ளது என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் படம் திரையரங்குகளில் பார்க்க தவறிவிட்டதாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் - சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

