கேரளாவின் முக்கியமான பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.
சென்னை - மங்களூரு வழித்தடத்திற்கு கூடுதல் சேவை
சென்னை எழும்பூர் மற்றும் மங்களூரு இடையே வாரந்தோறும் இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும். இந்த ரெயில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாகச் செல்லும். இதனால் மேற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் இந்த சேவையை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளுக்கு பயணிக்கும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை - கொல்லம் மற்றும் தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள்
சென்னை சென்ட்ரல்-கொல்லம் மற்றும் தாம்பரம்-திருவனந்தபுரம் இடையேயும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் தமிழகத்தின் பல முக்கிய ரெயில் நிலையங்களை இணைத்து இயக்கப்படுவதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் சிரமமின்றி கேரளா நோக்கிப் பயணிக்க முடியும். குறிப்பாக மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிப்போருக்கு இந்த சேவை கூடுதல் வசதியை ஏற்படுத்தும். ஓணம் பண்டிகை காலத்தில் குடும்பத்தினருடன் இணைந்து விழாவைக் கொண்டாட விரும்பும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான நிவாரணமாக பார்க்கப்படுகிறது. : பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!முன்பதிவை முன்கூட்டியே செய்ய ரயில்வே அறிவுரை
இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 9-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் அதிகாரப்பூர்வ முன்பதிவு மையங்கள் அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். ஓணம் பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகள் மிக விரைவாக நிரம்பும் வாய்ப்பு இருப்பதால், பயணத் திட்டத்தை முன்கூட்டியே உறுதி செய்து உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறும் ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் பண்டிகை காலத்தில் பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்தை உறுதி செய்வதே ரெயில்வேயின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
