டெஹ்ரான், ஜூன் 18 : ஈரான் (Iran), ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தற்காலிக தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் நாளை (ஜூன் 19, 2026) சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக நேரில் கையெழுத்தாக உள்ளது. ஹோர்முஸ் எப்போது முழுமையாக மீண்டும் திறக்கப்படும்? ட்ரம்ப் சொன்ன முக்கியத் தகவல்! இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை தீர்மானிக்கும் முக்கிய கப்பல் வழித்தடமாக உள்ள ஹோர்முஸ் நீரிணை நாளை (ஜூன் 19, 2026) முதல் முழுமையாக திறக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக நாடுகள் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடுகளை எதிர்க்கொண்டு வந்த நிலையில், இதன் மூலம் அது முடிவுக்கு வரும்.ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
இந்த நிலையில் தான், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளுக்காக 60 நாட்கள் காலக்கெடுவை, பெரிதாக கருதவில்லை. அவர்கள் சரியாக நடந்துக்கொள்ளும் வரை அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டேன். ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம். அவர்கள் இணங்கி வராவிட்டால் நாங்கள் குண்டுவீசுவோம் என்பது ஒரு மிரட்டல் என அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருது - மேலும் ஒரு கௌரவம்! ஆனால், அது பெரும்பாலும் நடக்கவே செய்யும். ஈரான், ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம். அவர்கள் அப்படி செய்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
