Dailyhunt
ஒரு ஆண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி தொகை கிடைக்கும் - இந்த விதி யாருக்கு பொருந்தும்?

ஒரு ஆண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி தொகை கிடைக்கும் - இந்த விதி யாருக்கு பொருந்தும்?

TV9 Tamil 1 week ago

ந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் ஒரு பகுதியாக,  கிராஜுவிட்டி விதிகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, ஒரு பணியாளர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகே  கிராஜுவிட்டி தொகையைப் பெற தகுதியானவராக கருதப்படுவார். ஆனால், கடந்த 2025 நவம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களின் படி,  சில ஊழியர்கள் மட்டும்  1 ஆண்டு பணியாற்றியிருந்தாலே அவரால் கிராஜுவிட்டி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராஜுவிட்டி என்பது ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றியதற்கான பாராட்டாக வழங்கப்படும் ஒரு ஊக்கத்தொகை போன்றது.  கடந்த 1972 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த ஊக்கத் தொகை சட்டத்தின் படி, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கிராஜுவிட்டி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.  அதன் படி  ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது, ராஜினாமா செய்யும்போதோ அல்லது வழங்கப்படும் முக்கிய சமூக பாதுகாப்பு நன்மையாகும்.

ஒரு ஆண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி தொகை கிடைக்கும்

புதிய விதியின் படி 1 ஆண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு கிராஜுவிட்டி பெறும் சலுகை,  அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்காது. குறிப்பாக,  குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நிறுவனத்தால் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கே இந்த நன்மை வழங்கப்படும். அவர்கள் நிரந்தர பணியாளர்களாக கருதப்பட மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்கள். இவ்வகை பணியாளர்களுக்கு, அவர்கள் பணிபுரிந்த காலத்தை அடிப்படையாக கொண்டு கிராஜுவிட்டி வழங்கப்படும்.

அதே நேரம் நிரந்தர பணியாளர்களுக்கு பழைய விதியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நிரந்தர பணியாளர்களாக நிறுவனத்தால் பணியமர்த்தப்படும் ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே கிராஜுவிட்டி பெற தகுதியானவர்களாக கருதப்படுவர். காண்டிராக்ட் அடிப்படையிலே அல்லது வேறு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு இந்த நன்மையை பெற முடியாது.

கிராஜுவிட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?

கிராஜுவிட்டி கணக்கிடும்போது பணியாளர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி போன்றவை சேர்த்து கணக்கிடப்படும். இந்த 3 தொகையும் சேர்த்து குறைந்தபட்சம் பணியாளரின் மொத்த ஊதியத்தில் 50 சதவிகிதம் இருக்க வேண்டும் எனவும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றம், குறுகிய கால ஒப்பந்த பணியாளர்களுக்கு இது மிகப்பெரும் நன்மையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி, உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil