தமிழ் நாட்டில் இன்று 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
சிறப்புத் தீவிரத் திருப்புதல் (SIR) பிறகும் கள்ள ஓட்டு - நடிகை அதிர்ச்சி:
தமிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கள்ள ஓட்டு முறையை ஒழிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிரத் திருப்புதல் (SIR) என்ற முறையை தேர்தலுக்கு முன்பாக செய்தது. இதன் காரணமாக கள்ள ஓட்டுகளை ஒழிக்க முடியும் என்று தெரிவித்து இருந்தனர். இத்தனை நடைமுறைகளைக் கடந்து இன்று தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. அதில் காலையில் இருந்து ஆங்காங்கே தங்களது ஓட்டை யாரோ போட்டுவிட்டார்கள் என்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ப்ளடி பெக்கர் மற்றும் சபா நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அக்ஷயா ஹரிஹரனின் ஓட்டும் வேறு யாரோ போட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேவையான அனைத்துச் சரியான அடையாள அட்டைகளும் கையில் இருந்தபோதிலும், ஒரு 'Tendered Vote' (சவால் வாக்கு) அளிப்பதற்காக அவர் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்தது. வாக்குச்சாவடியில் நடைபெற்ற சரிபார்ப்பு நடைமுறையில் இது ஒரு மிகப்பெரிய தோல்வி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ... ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி.. ஒரே ஒரு நாள்… சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழுஇணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
... Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

