மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழில் தனுஷின் (Dhanush) மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் குறித்து நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:'
பள்ளிச்சட்டம்பி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இப்படத்தின் கதைக்களமானது, கேரளாவின் முதல் ஜனநாயக மாற்றத்தின் பின்னணியில், ஒரு கிறிஸ்தவப் பாதுகாப்புப் படைக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்ட, சாதுவான சுபாவம் கொண்ட இளைஞன் ஒருவன், சக்திவாய்ந்த ஒரு கம்யூனிச நாடகம் மற்றும் அதன் முன்னணி நடிகருடனான எதிர்பாராத சந்திப்பிற்குப் பிறகு, தனது விளையாட்டுத்தனமான மனப்பான்மையைக் கைவிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான் என்பதே இப்படத்தின் கதையாகும். இதில் டோவினோ தாமஸ் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான வேடத்தில் கையேடு லோஹரும் நடித்துள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளார் ஜேக்ஸ் பெஜாய், தனது இசையின் மூலம் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? - இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு! இந்த பள்ளிச்சட்டம்பி படமானது முழுக்க கிராமத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது விறுவிறுப்பாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என, பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
