Dailyhunt
P.Moorthy Tamil Nadu Election: மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை உரித்தாக்குவாரா பி.மூர்த்தி!

P.Moorthy Tamil Nadu Election: மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை உரித்தாக்குவாரா பி.மூர்த்தி!

TV9 Tamil 1 month ago
திமுகவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்து வருபவர் பி. மூர்த்தி. இவர், 1959 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி பெரியண்ணன்- பாப்பாத்தி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இளமை காலத்திலேயே அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் தொண்டனாக இணைந்து, மெல்ல மெல்ல வளர்ந்து பல்வேறு பதவிகளை அடைந்தார் பி. மூர்த்தி. பின்னர், 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அப்போது, முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பி. மூர்த்தி தனது வெற்றியை பதிவு செய்து சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்ததுடன் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். பின்னர், 2011- சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களம் இறக்கப்பட்ட பி. மூர்த்தி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.

மதுரை கிழக்கு தொகுதிக்கு மாறிய பி.மூர்த்தி

இதைத் தொடர்ந்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாறி போட்டியிட்ட பி. மூர்த்தி அந்த தொகுதியிலும் தனக்கான வெற்றியை பதிவு செய்தார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கிய பி. மூர்த்தி எம்எல்ஏவாக தேர்வானதுடன், அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் இலாகா வழங்கப்பட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் களம் கண்ட பி. மூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எல். சந்தானத்தை வீழ்த்தி 47 ஆயிரத்து 771 வாக்குகள் (42.4 சதவீதம்) பெற்று வெற்றியை உரித்தாக்கினார்.  
அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்

மதுரை கிழக்கில் 2 முறை வெற்றி

பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மா. வி. கருப்பையாவிடம், பி. மூர்த்தி தோல்வியை தழுவினார். 2016 சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பி. மூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி. பாண்டியை வீழ்த்தி 1,08,569 (51.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றியை தன தாக்கி கொண்டார். இதே போல, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களம் கண்ட பி. மூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணனை வீழ்த்தி 1,22,729 (52 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா

அப்போது. முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொறுப்பு பி. மூர்த்திக்கு வழங்கப்பட்டது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலிலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருப்பதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.  
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil