Dailyhunt
PPF முதல் SSY வரை.. முதலீடு செய்து அதிக லாபம் பெற உதவும் திட்டங்கள்.. லிட்ஸ் இதோ!

PPF முதல் SSY வரை.. முதலீடு செய்து அதிக லாபம் பெற உதவும் திட்டங்கள்.. லிட்ஸ் இதோ!

TV9 Tamil 1 month ago
பொதுமக்கள் சேமிக்க அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அத்தகைய திட்டங்கள் தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF - Public Provident Fund), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS - Senior Citizen Saving Scheme), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC - National Saving Certificate) ஆகியவை. இந்த நிலையில், இந்த திட்டங்களில் சிறப்பு அம்சங்கள் என்ன, எந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவை மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அரசு 8.2 சதவீதம் வட்டி வழங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முதலீடு செய்து தங்களது கடைசி காலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY - Sukanya Samriddhi Yojana). இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப், செயலி மூலம் ஈஸியா கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம் - எப்படி தெரியுமா?

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்

அஞ்சலங்கள் மூலம் வழங்கப்படும் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ். இந்த திட்டத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை விட சற்று குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி

நீண்ட கால தேவைகளுக்கு ஏற்ற திட்டமாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் சிறந்த பலன்களை பெற முடியும். வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன? மேற்குறிப்பிட்டுள்ள இந்த அனைத்து திட்டங்களும் சிறந்த பலன்கள் மற்றும் லாபத்தை வழங்க கூடியவையாக உள்ளன. ஆனால், இளம் வயதில் முதலீடுன் செய்ய விரும்பினால் அவர்கள் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்துவது அதிக லாபத்தை பெற வழிவகை செய்யும். மொத்தமாக ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் தேவைக்கு ஏற்ப, அதிக பலன் தரக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil