தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth).
செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசிய விஷயம் :
செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், "ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், விரைவில் முடிவடைந்துவிடும் என கூறினார். பின் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் எனவும் கூறினார். பின் ரஜினிகாந்திடம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு கையெடுத்து கும்பிட்டவாறு, ஹா ஹா வணக்கம் என தெரிவித்துள்ளார். டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் - TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்வீர்களா? என கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு நோ கமெண்ட்ஸ் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் KHXRK திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அதில் தெரிவித்திருந்தார் என்பது குடிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் படம் குறித்த எக்ஸ் பதிவு:
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறதாம்.

