பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பது அனைத்து துறைகளிலும் தினம் தினம் நடந்துகொண்டே இருக்கின்றது.
இந்த கொடுமைகளுக்கு எதிராக எத்தனை கடுமையனா சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இந்த் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக சென்னையை விட்டே வெளியேறியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் தமிழ் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரை பாடகியாக பலருக்கு தெரிந்து இருந்தாலும் பிக்பாஸ் தமிழில் கலந்துகொண்ட போட்டியாளர் மாயா எஸ் கிருஷ்ணனின் அக்கா என்றும் பலருக்கு தெரியும்.
இவர் தற்போது அளித்த குற்றச்சாட்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய கேமரா.... பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரபல இசையமைப்பாளர்:
அதன்படி பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் சென்னையை விட்டுவிட்டு முழுவதுமாக ரிஷிகேஷில் குடியேறியது குறித்து பேசியுள்ளார்.அதில் குறிப்பாக தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் காரணமாகவே சென்னையை விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். .... ஹேசா… ருத்ரசா… 9 ஆண்டுகளைக் கடந்தது பிரபாஸின் பாகுபலி 2 படம்! மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாடல் பாடுவதற்காக ஸ்டூடியோவிற்கு சென்ற போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறித்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் ரகசிய கேமராக்களை பொருத்தி தவறான முறையில் வீடியோ எடுத்தும் துன்புறுத்தியதாக ஸ்வாகதா தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த இசையமைப்பாளர் யார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. விரைவில் அதுகுறித்து பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ... The Paradise: நானி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. 'தி பாரடைஸ்' படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

