தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரன். இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
நடிகர் மாதவன் நாயகனாக இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், விவேக், அதுல் குல்கர்னி, அனு ஹாசன், ஜானகி சபேஷ், கலைராணி, ராஜஸ்ரீ, மதன் பாப், எஸ்.என்.லட்சுமி, விஜயன், ரவி பிரகாஷ், நெல்லை சிவா, போண்டா மணி, சம்பத் ராம், சாத்தப்பன் நந்தகுமார், பாவா லட்சுமணன், பெஞ்சமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமா பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பாக தயாரிபாளர். ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சூப்பர் ஹிட் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் மாதவன்:
இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வந்தால் 24 வருடத்தை முடிவடைய உள்ளது. இந்த நிலையில் படத்தி ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. இது குறித்த அறிவிப்பை படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்தாலும் ரீ ரிலீஸ் தேதி எதையும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் ரன் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை தற்போது படத்தின் நாயகன் மாதவன் வெளியிட்டுள்ளார். அதன்படி மாதவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் வருகின்ற 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு ரன் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் மாதவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

