தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna).
இவர் தற்போது திருமணத்திற்கு பிறகும், படங்களில் நாயகியாகவே நடித்துவருகிறார். அந்த வகையில், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக ரணபாலி(Ranabaali) என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் 60ஸ் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று 2026 ஏப்ரல் 05ம் தேதியில், ராஷ்மிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
அந்த வகையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரணபாலி படத்தில் இவர் நடிக்கும் "ஜெயம்மா" (Jayamma) கதாபாத்திர மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வாரிசு பட செட்-ல நடத்த நகைச்சுவை சம்பவம் - ஓபனாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகாவின் ஜெயம்மா கதாபாத்திர மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ரணபாலி படக்குழு :
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஜோடியாக நடித்துவரும் புது படம்தான் ரணபாலி. இதை தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படமானது 60ஸ் காலத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா "ஜெயம்மா" என்ற வேடத்தில் நடிக்க, விஜய் தேவரகொண்டா "ரணபாலி" என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்! இப்படமானது பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படமானது தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.