நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
தளபதி விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து ராஷ்மிகா மந்தனா:
முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா, "வாரிசு பட ஷூட்டிணத்தின்போது, எனது காட்சியை முடிந்ததற்கு பிறகு, அங்கேயே ஷூட்டிங் செட்டில் ஒரு ஷோபாவில் படுத்து அசந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை பார்த்த விஜய் சார் மற்றும் வம்சி சார் பார்த்து சிரித்தனர். அப்போது விஜய் சார், பாருங்க இந்த பொண்ணு வந்து நடிக்கிது, நடிச்சிட்டு தூங்குது.. அடுத்து சாப்புடுது, பின்ன வீட்டுக்கு போகுது என விஜய் சார் என்னை பற்றி காமெடியாக பேசினார்" என அவர் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் - நடிகை வாணி போஜன்நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தற்போது, காக்டைல் 2, மைசா, ராணபாலி போன்ற திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இதில் இந்தியில் நடித்துள்ள காக்டைல் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ரணபாலி படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் மதத்திலும் வெளியாகுவதாக படக்குழுக்கள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

