Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது சக்குரா நிக்குரா பாடல் வீடியோ

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது சக்குரா நிக்குரா பாடல் வீடியோ

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக இளம் நடிகர்கள் பலர் நாயகனாக தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். நடிகர் தனுஷ் தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். தற்போதையை இளைஞர்களான 2 கே கிட்ஸ்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் வெளிப்படையாக பேசி இருப்பார் நடிகர் தனுஷ். தனுஷ் இதுவரை தான் இயக்கும் படங்களில் அவர் நடித்து வந்தார் முதன் முறையாக அவர் இயக்கி நடிக்காத படம் பவிஷ் நாராயணின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பவிஷ் நாராயண் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

இணையத்தில் வைரலாகும் சக்குரா நிக்குரா பாடல்:

நடிகர் பவிஷ் நாராயண் நடிப்பில் உருவாகி உள்ள இந்த லவ் ஓ லவ் படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக சக்குரா நிக்குரா என்ற பாடல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ இணையத்தில் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ... மமிதா பைஜூவை தொடர்ந்து தென்னிந்திய சினிமவில் கொடிகட்டி பறக்கும் ரியா ஷிபு

லவ் ஓ லவ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil