Dailyhunt
ரிலீஸ் கன்ஃபார்ம். இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்

ரிலீஸ் கன்ஃபார்ம். இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்

TV9 Tamil 1 week ago
மிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
இவரது இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக லவ் டுடே என்ற படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த முறை படத்தை இயக்கியது மட்டும் இன்றி படத்தில் நாயகனாகவும் அவர் நடித்து இருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆனார். இயக்குநராக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து நாயகனாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடிக்க தொடர்ந்து கமிட்டாகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆன இரண்டாவது படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் படம் தொடங்கி 2 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக கமிட்டான டிராகன் மற்றும் டியூட் ஆகியப் படங்கள் எல்லாம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனைப் படத்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்படுவது வழக்கமாகவே இருந்தது.

இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் ஒருவழியாக வருகின்ற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று 04-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... தனுஷின் 55-வது படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா? வைரலாகும் தகவல்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil