தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல வெள்ளித்திரையிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது:
நடிகர் ரியோ ராஜ் நாயகனாகவும் நடிகை வர்த்திகா நாயகியாகவும் நடித்துள்ள படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் முனுஷ்காந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் வீடியோ வெளியிட்டு படக்குழு கொண்டாடி உள்ளது. மேலும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ... தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

