Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
RJ Balaji: கருப்பு திரைப்பட ட்ரெய்லர் லோடிங்.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

RJ Balaji: கருப்பு திரைப்பட ட்ரெய்லர் லோடிங்.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

TV9 Tamil 3 weeks ago
டிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் 2026ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் திரைப்படம்தான் கருப்பு(Karuppu).
இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த திரைப்படமானது கருப்பசாமியின் தெய்வீகம் மற்றும் உண்மைகாண் போராட்டம் குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருக்கும் நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyakkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 4 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் இது சூர்யாவின் 45வது திரைப்படம் என்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த சூப்பர் அப்டேட்டை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் - அப்டேட் இதோ

கருப்பு படத்தின் ட்ரெய்லர் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட அப்டேட் பதிவு:

இந்த அப்டேட் பதிவில் ஆர்.ஜே.பாலாஜி, "கருப்பு படத்தின் ட்ரெய்லர் தயாராகிக்கொண்டு இருப்பதாகவும், விரைவில் பரிமாறப்படும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில் கண்டிப்பாக வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. அந்த வகையில் இப்படமானது இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 மே 8ம் தேதியில் அல்லது மே 6ம் தேதிக்கு பிறகு வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.

நான் தான் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தேன்.. ஆனால் - இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்! இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைகள் விற்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என அறிவிக்கப்படவில்லை. இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ 80 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாம். அதன்படி இப்படம் நிச்சயம் சூர்யாவிற்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil