தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் சில ஆண்டுகளாக பெரிதும் இந்தத் படங்களில் நடிக்காவிட்டாலும், தற்போது இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் மா இன்டி பங்காரம்.
இந்த படமானது அதிரடி ஆக்ஷசன் மற்றும் பேமிலி எண்டெர்டெயிமென்ட் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இந்த படத்தை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா, கௌதமி, குல்ஷன் தேவய்யா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இந்த படத்தை அடுத்தாகவும் நடிகை சமந்தா புது திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்தியில் பேபி ஜான் என வெளியான, தெறி பட ரீமேக்கில் ஆரம்பத்தில் வருண் தவனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா கேட்கப்பட்ட நிலையில், அவரின் பரிந்துரையின்படி கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமானார். இவர்கள் இருவருமே இந்த படத்திற்கு முன்னே நெருங்கிய தோழிகள்.

அந்த வகையில் இவர்கள் இருவருமே தளபதி விஜய்யுடன் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, ரகசியம் உடைத்துள்ளார். அது என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இல்லையாம்.

அதில் பேசிய சமந்தா, கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இல்லை. ஆனால் இன்னொரு பழக்கம் இருக்கு. அது ஹைப்பர் மேக்ஸ் என சொல்ல கூடிய, அதீத நகைச்சுவை உணர்வு அவருக்கு உண்டு. அவரின் பக்கத்தில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. மிட் நைட்டிலும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும், அந்த அளவிற்கு தொடர்ந்து காமெடியாக பேசிக்கொண்டே இருப்பார்.

மேலும் கீர்த்தி சுரேஷ், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திலே ரைமின் காமெடி வசனம் பேசி, நம்மையும் டேமேஜ்-ம் செய்துவிடுவார். எனக்கு தெரிந்தவர்களின், அதிகம் சிரிக்கவைக்கும் பெண் அவர்தான் என அந்த நேர்காணலில் நடிகை சமந்தா ரூத் பிரபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

