Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன். வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!

சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன். வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!

TV9 Tamil 6 months ago
மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தனது கடின உழைப்பின் காரணமாக மக்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கத் தொடங்கி தொடர்ந்து 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது பராசக்தி படம். மேலும் இந்தப் படம் வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்திற்காக  இயக்குநர் சிவகுமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்தார். இவர் தற்போது தாய் கிழவி என்ற படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்கி உள்ளார். இது தான் இவரது முதல் படம். இரண்டாவது படத்திலேயே இயக்குநர் சிவகுமார் முருகேசன் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். அது மட்டும் இன்றி இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரிக்க உள்ளது. இதன் மூலமாக இரண்டாவது முறையாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது சேயோன் பட வீடியோ:

இந்தநிலையில் இன்று 17-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைக் கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் உருவாக உள்ள சேயோன் படத்தில் இருந்து வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமியாடியாக நடித்து இருப்பது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... வழித்துணையே.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!

சேயோன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil