Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாப்பாட்டுக்குதான் மா பிரச்சனையே.. பிக் பாஸில் தன்யாவால் கடுப்பான லக்ஷ்மி பிரியா!

சாப்பாட்டுக்குதான் மா பிரச்சனையே.. பிக் பாஸில் தன்யாவால் கடுப்பான லக்ஷ்மி பிரியா!

TV9 Tamil 20 hrs ago
தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பமான நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது.
இதன் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், இதுவரையில் கிட்டத்தட்ட 8 வாரங்களை கடந்துள்ளது. கடந்த வாரத்தில் வாக்குகள் எண்ணிக்கையின்படி கரீஷ்மா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 14 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்கானது சிறப்பாக நடந்துவருகிறது. இந்த டாஸ்கில் அஸ்மிதா ப்ரின்ஸ்பால் ஆகவும், தன்யா மற்றும் சாதிகா இருவரும் கிச்சன் டீமில் உள்ளனர். அந்த விதத்தில் கிச்சன் அணியில் இருக்கும், தன்யாவால் லக்ஷ்மி பிரியா கோபப்பட்டது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. கமல் ஹாசனின் பிறந்த நாளில் தொடங்கும் அவரது புதுப் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

பிக் பாஸில் சாப்பாட்டிற்காக வாக்குவாதம் செய்த தன்யா - லக்ஷ்மி பிரியா:

இந்த ப்ரோமோவில், தன்யா முட்டை பச்சையாகவே அனைவருக்கும் வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார். உடனே கோபப்பட்ட லக்ஷ்மி பிரியா, அது எப்படி பச்சையாக குடுக்கலாம். இது எந்தமாதிரியான உணவாக இருக்கும். என அஸ்மிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்யா மற்றும் அஸ்மிதாவை பார்த்து உங்களுக்கு அறிவு இல்லையா என்பது போல அதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னப்பா இது…. மீண்டும் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களிடம் சண்டையிடும் ஜேசன்…! ஏற்கனவே ஜேசன், சாப்பாட்டிற்காக சாதிகாவிடம் சண்டையிட்டிருந்தார். உடனே ஜேசன் தனக்கு சாப்பாடு வேண்டாம் என அத்தைக்கு தூக்கி அறிந்திருந்தார். அதன் பிறகு தற்போது லக்ஷ்மி பிரியவும் சாப்பாட்டிற்காக சண்டையிட்டு அஸ்மிதா மற்றும் தன்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு :

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்க் நடந்துவருகிறது. இந்த டாஸ்க் காமெடியாக போகும் என்று நினைத்த நிலையில், டாஸ்க்கிலும் சண்டைகள் எழுந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் எவிக்ஷன் இருக்காது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil