Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. கையில் வாளுடன் கேக் வெட்டிய விஜய் தாமு!

சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. கையில் வாளுடன் கேக் வெட்டிய விஜய் தாமு!

TV9 Tamil 1 month ago
மிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
களம் கண்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு அதிகமான தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று இருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் சாதாரண நபர்கள் ஆவர். அவர்கள், நாளை நடைபெற இருப்பதாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ஆட்டோ ஓட்டுநரான விஜய் தாமு என்பவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். அவர், தனது கையில் வைத்துள்ள வாளால் கேக் வெட்டுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்சியினர் சார்பில் விஜய் தாமுவுக்கு வாள் பரிசு

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ராயபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான விஜய் தாமு வெற்றி பெற்றார். இவர் அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது, அவருக்கு கட்சியினர் சார்பில் மிகப்பெரிய வாள் ஒன்று பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாளை கையில் ஏந்தியவாறு ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு கேக்கை வெட்ட முயன்றார். அப்போது, மற்றொரு தமிழக வெற்றிக்கழக நிர்வாகியான லயோலா மணி அவரை தடுத்ததாக கூறப்படுகிறது.  
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..

கையில் வாளால் கேக் வெட்டிய விஜய் தாமு

ஆனால், அதையும் மீறி விஜய் தாமு வாளால் கேக்கை வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களால் கேக் வெட்டுவது சட்டப்படி குற்றமாகும். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் தாமு எம்எல்ஏவாக பதவி ஏற்க இருக்கும் நிலையில், இது போன்ற சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தவெகவினர் 6 பேர் கைது

இது மட்டும் இன்றி, ராயபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, அந்த பகுதியில் சிறுமி ஒருவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வட்டச் செயலாளரான தினேஷ் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல, ராமநாதபுரத்தில் காரில் போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாக தவெகவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil