Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்ன? கேள்வி நேரம் முதல் மானியக் கோரிக்கை வரை என்ன நடக்கும்?

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்ன? கேள்வி நேரம் முதல் மானியக் கோரிக்கை வரை என்ன நடக்கும்?

TV9 Tamil 2 weeks ago
கஸ்ட் 27, 2026: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதேசமயம், இன்று இரண்டு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை:

ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகத்திற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் மூன்று நாட்கள் நடைபெற்றன. பின்னர், ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரைகளும் இடம்பெற்றன.  சோபா செட் இல்லை… லாக்கரே வந்தாலும் தேமுதிக முடிவு மாறாது பிரேமலதா ஓபன் டாக்! இந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

இன்று முதல் கேள்வி நேரம்:

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுவரை கேள்வி நேரம் இடம்பெறாத நிலையில், இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த முறை கேள்வி நேரத்தில் ஐந்து கேள்விகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டியிருப்பதால், கேள்வி நேரத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  வட உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? கேள்வி நேரம் முடிந்ததும், இன்றைய பேரவையில் பாஜக உறுப்பினர் போஜராஜன், போட்டிப் படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்துப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 துறைகள் மீதான மானியக் கோரிக்கை:

இதைத்தொடர்ந்து, சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தில் அமைச்சர் வன்னியரசு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த இரண்டு துறைகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பேரவை நிகழ்வுகள் தினமும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil