தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்த விஜய் கடந்த 2024- ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
பட்டு வேஷ்டி - சட்டையில் தலைமைச்செயலகம் வந்த விஜய்
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை ( மே 29) பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். இதனை பார்த்த உயர் அதிகாரிகள் முதல் தலைமைச் செயலக பணியாளர்கள் வரை அனைவரும் வியந்தனர். சென்னை நீலாங்கரையில் தனது நெருங்கிய நண்பரும், மேனேஜருமான ஜெகதீஷ் பழனிசாமி இல்ல நிகழ்ச்சியில் முதல்வர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து அப்படியே தலைமைச் செயலகம் வந்ததாக கூறப்படுகிறது. ராஜபாளையம் முதல் ஜெர்மன் ஷெப்பர்ட் வரை… கொடையில் இன்று நாய் கண்காட்சி; அனுமதி முற்றிலும் இலவசம்!வெள்ளை நில சட்டை - பெய்ஜ் நிற பேண்ட்
தேர்தலுக்கு முன்பாக விஜய் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை, பெய்ஜ் நிற பேண்ட் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் முக்கிய இடம் பிடித்தது. இதேபோல, அவர்களும் வாக்குப்பதிவு நாளில் இதே உடையில் வந்திருந்தனர். மேலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க சென்ற போதும் விஜய் இதே ஆடையை அணிந்திருந்தார். அண்மையில் முதல்வராக பதவி ஏற்ற பின்னரும் கருப்பு கோட் சூட் அணிந்து வரும் விஜய், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்க சென்ற போதும், இதே கோட் சூட் ஆடையை அணிந்திருந்தார்.அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்த விஜய் உடனே கருப்பு நிற கோட் சூட்டுக்கு மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பின்பற்றி தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் முதல்வர் ஜோசப் விஜய் வருகை தந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இன்று தொடங்க இருந்த 'சிங்கப்பெண் அதிரடிப் படை' திட்டம் திடீர் ரத்து.. 2-வது முறை தள்ளிப்போனதன் பின்னணி என்ன?
