Dailyhunt
Selvaraghavan: புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!

Selvaraghavan: புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!

TV9 Tamil 1 month ago
யக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் செல்வராகவன்(Selvaragavan).
இவர் நடிகர் தனுஷின் (Dhanush) உடன்பிறந்த சகோதரர் ஆவார். தனுஷின் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்குநராக நுழைந்தார். இதையடுத்து பல நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் தனுஷ்மற்றும் செல்வராகவனின் காம்போவில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து "ஆயிரத்தில் ஒருவன்" (Aayirathil Oruvan) என்ற படத்தை இயக்கியும் ஹிட் கொடுத்திருந்தார் செல்வராகவன். அந்த வரிசையில் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் கதாநாயகனாக நடித்துள்ள புது படம்தான் "மனிதன் தெய்வமாகலாம்" (Manithan Deivamagalam). இப்படமானது வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்ட செல்வராகவன், புதுப்பேட்டை 2 படம் (Pudhupettai 2 Movie) பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார். நான் பாத்து வியந்தது எல்லாமே கமல் சார் படங்கள்தான் - நடிகர் ஆசிஃப் அலி!

புதுப்பேட்டை 2 திரைப்படம் குறித்து செல்வராகவன் :

இயக்குநர் செல்வராகவன் அந்த பதிவில், "புதுப்பேட்டை 2 படத்தின் கதையை எழுதிமுடித்துவிட்டேன்" என அவர் அதில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது. மேலும் தனுஷ் ஏற்கனவே தனது கைவசத்தில், கிட்டத்தட்ட 8 படங்களுக்கும் மேல் வைத்திருக்கும் நிலையில், செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் எப்போது இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உருவாக்க கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேல் ஆகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் :

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில், கடந்த 2006ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் புதுப்பேட்டை. இந்த படமானது வித்தியாசமான கேங்ஸ்டர் கதையில் வெளியாகியிருந்தது. இதில் தனுஷ், விஜய் சேதுபதி, சினேகா, சோனியா அகர்வால் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். 20006ம் ஆண்டில் வெளியான அந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அதை தொடர்ந்து தற்போது மக்களால் கொண்டாடும் படமாக இருந்துவருகிறது. மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி… இயக்குநர் வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி இதையடுத்து புதுப்பேட்டை 2 படம் எப்போது உருவாகும் என பலரும் செல்வராகவனிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர். அந்த வகையில் தற்போது இயக்குநர் செல்வராகவன், புதுப்பேட்டை 2 படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுப்பேட்டை 2 படத்தில் தனுஷ் எப்போது இணைகிறார் என்பது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil