தமிழ் சினிமாவில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் செல்வராகவன்(Selvaraghavan). இவர் தமிழில் நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் பட ட்ரைலர் குறித்த எக்ஸ் பதிவு:
செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு :
இந்த படத்தில் நடிகர் செல்வராகவன் ஒரு சாதாரணமான ஹோட்டல் வைத்திருக்கும் நபராக நடித்துள்ளார். பல நாட்களாக திருமணத்திற்காக பெண் தேடிஅலையும் இவருக்கு, அழகான மனைவி அமைக்கிறார். அவர் எந்த அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் வசித்துவருகிறார். ஓட்டுக்காக மட்டுமே வரும் அரசியல்வாதிகளுடன், மல்லுக்கட்டி தனது கிராமத்திற்கு எவ்வாறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருகிறார் என்பதே படத்தின் கதை. ரோடு, மின்சாரம், மருத்துவம், பள்ளி என அடிப்படை வசதி இல்லாத கிராமத்திற்கு, ஒரு தெய்வமாக எவ்வாறு உதவி செய்கிறாரா என்பதே மனிதன் தெய்வமாகலாம் படத்தின் கதை. இதுவே இந்த படத்தின் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருக்கா? எனக்கு தெரிந்தவரை அந்த பழக்கம் இருக்கு - ரகசியம் பகிர்ந்த சமந்தா! இந்த படமானது ஆக்ஷன் திரில்லர் ஜானரில் அமைந்திருக்கும் நிலையில், வரும் 2027 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், 13 முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் திரையரங்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
